தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து மரணம்.
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொட்டாஞ்சேனை புளுமெண்டல் தொடர் மாடிக்குடியிருப்பில் 5ஆவது மாடியில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொட்டாஞ்சேனை புளுமெண்டல் தொடர் மாடிக்குடியிருப்பில் 5ஆவது மாடியில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.
உயிரிழந்த சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கரையோர காவல்துறையினரால் 5 ஆயிரத்து 10 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த தொடர்மாடி குடியிருப்புக்கு அழைத்து செல்லப்பட்டபோது அங்கிருந்து கீழே பாய்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.