அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் இன்று (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.

2025 மார்ச் 10, அன்று இரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வை கண்டித்து இந்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்று புதன்கிழமை காலை 8:00 மணி முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்க GMOA வின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

மேலும், போராட்டம் நாளை காலை 8:00 மணி வரை நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளில் அமுலில் இருக்கும்.

எனினும், போராட்டத்தினால் அவசர சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படாது.

மேலும், ஆபத்தான நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் GMOA சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், இந்த வேலைநிறுத்தம் சிறுவர் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் இராணுவ மருத்துவமனைகளுக்குப் பொருந்தாது.