மழைக் கொண்ட காலநிலை தொடர்பான தற்போதைய நிலவரம்!

நாட்டில் தற்போது நிலவுகின்ற மழை கொண்ட காலநிலை இன்று முதல் (12.03.2025) பெரும்பாலும் சீரடையும் என முன்னாள் சிரேஸ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்
அதேநேரம் உருவாகி உள்ள காற்று சுழற்சியானது தாழமுக்கமாக வலுவடையும் என்றும்,
இது மட்டக்களப்பை ஊடறுத்து செல்லும் என்றும்,
இந்த மழை கொண்ட காலநிலை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடரும் என்றும்,
குளங்கள், நீர்நிலைகள் நிரம்பும் என்றும்,
கனத்த மழை அல்லது மிக கனத்த மழை பெய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இன்று முதல் நிலைமை சீரடையும்.
பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதிக்குப் பின்னர் இம்மாத இறுதி வரை
இடையிடையே சிறிதளவான மழையும்,மேக மூட்டமான கால நிலையும், இடையிடையே வெயில் கொண்ட காலநிலையும் மாறி மாறி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் பெரியளவான கனத்த மழைக்கு சாத்தியம் இல்லை.
அத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதிக்குப் பின்னர் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகும் சாத்தியம் உள்ளது.
ஆனால் அது ஒரு வீரியமான காற்று சுழற்ச்சியாக இருக்காது என்பதனால் மழையின் அளவும் குறைவாகவே இருக்கும் என முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.