ரூபிக்ஸ் க்யூபில் அனுரகுமார திசாநாயக்க - சாதனை படைத்த சிறுவன்!

இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மிகப்பெரிய உருவப்படத்தை ரூபிக்ஸ் க்யூப் (Rubik cube) மூலம் உருவாக்கி சோழன் உலக சாதனை படைத்த 11 வயது சிறுவன்.

இம்புல்கொட பகுதியில் வசித்து வரும் நிவின லக்மால் மற்றும் தீபிகா குமாரி ஆகியோரின் 11 வயது மகனான சன்சுல செஹன்சா லக்மால் இலங்கையின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 91 அங்குர உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட உருவத்தை 1200 ரூபிக்ஸ் க்யூக்களை பயன்படுத்தி மூன்று மணிநேரம், 13 நிமிடங்கள் மற்றும் 7 நொடிகளில் உருவாக்கி சோழன் உலக சாதனை படைத்தார்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்திய இதற்கான நிகழ்வானது யக்கலையில் உள்ள இராணுவ முகாமில் முகாமின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் மஹா துவாக்கார மற்றும் துணை கட்டளை அதிகாரியான பிரிகேடியர் வாசகே போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாணவனின் உலக சாதனை முயற்சியை முறையாகக் கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பொதுச் செயலாளர் இந்திரனாத் பெரேரா, துணைத் தலைவர் நாகவாணி ராஜா, ஸ்டெப்ஸ் அமைப்பின் இயக்குநரும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான தலைவர் பிரான்சிஸ் ஜேசுதாசன் மற்றும் பீச்சில் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷன் அமைப்பின் இயக்குநரும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சோழன் உலக சாதனை படைத்த மாணவனுக்கு இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ் தங்கப்பதக்கம் நினைவு கேடயம் அடையாள அட்டை மற்றும் கோவைகள் போன்றவற்றை வழங்கி பாராட்டினார்கள்.