நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மேலும் 62 சட்டங்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு ...
நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு வசதியாக கடந்த 14 மாதங்களில் நாடாளுமன்றம் 42 புதிய சட்டங்களை இயற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் மேலும், கூடுதலாக 62 சட்டங்களை நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தநிலையில் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதை நிறைவேற்ற முடியாவிட்டால், அடுத்த கூட்டத்தொடரில் யோசனைகள்; ஒப்புதலுக்காக மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்
இளம் சட்ட வல்லுனர்களுடன் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான உரையாடலின்போதே அவர் இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார் 1977 ஆம் ஆண்டு முன்கொணரப்பட்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் திறந்த பொருளாதாரத்திற்கு வசதியாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது முக்கியமானவதாகும். நாட்டின் விரைவான பொருளாதார மாற்றத்திற்கு அத்தகைய சட்டம் மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
கல்வித்துறையிலும் பல புதிய சட்டங்கள் வரவிருப்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்தச் சட்டமியற்றும் முயற்சிகளைத் தடுக்கும் முயற்சிகள் இருந்தன எனினும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை யாரும் செல்லாததாக்கவோ அல்லது மறைமுகமாகத் தடுக்கவோ முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.
வியாக்கியானம் என்ற போர்வையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை குறைக்கும் முயற்சிகளை குறிப்பிட்ட ஜனாதிபதி, 1972 அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்குள் மட்டுமே உள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தச் செயற்பாடுகளை மனித உரிமை மீறல்கள் என முத்திரை குத்துவதற்கு சிலர் முனைகின்றனர்
எனினும் முதன்மையான மனித உரிமை நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமை என்றும், இரண்டாவதாக இளைஞர்களுக்கு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை ஏற்படுத்துவது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்
2021-2022 பொருளாதார வீழ்ச்சிக்கு பங்களிக்கும் காரணிகளை விபரிப்பதில் இருந்து தாம்; விலகி இருப்பதாக குறிப்பிட்ட அவர், அடிப்படையில் கடனை நீண்டகாலமாக நம்பியிருந்தமையே பிரச்சினைக்கான காரணம் என்று தெரிவித்துள்ளார்/
இந்தக் கடனைத் திறம்பட நிர்வகிக்கத் தவறியதால், வருமானம் இல்லாததால், நிதிக் கடமைகளைச் சமாளிக்க முடியாமல் போனதால், நாடு வீழ்ச்சி கண்டது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.