ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயம்

எதிர்வரும் காலங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அனைத்து இறப்புக்களும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மரண விசாரணை அதிகாரிகளுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், இலங்கையில் குழந்தை இறப்பு பகுப்பாய்வை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய பகுதியாகும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு வலியுறுத்தியது.

இளம் குழந்தைகளிடையே இறப்புக்கான பொதுவான காரணங்களைக் கண்டறிந்து, அத்தகைய இறப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.