சிங்கள தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களைப் பற்றி சிந்திப்பதில்லை!

தாங்கள் ஆட்சிக்கு வரும் வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் சிங்கள தலைவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் மக்கள் தொடர்பில் சிந்திப்பில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அதன் காரணமாக எமது பிரச்சினைகளை நாங்கள் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
 
மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நல்லாட்சிக் காலத்தில் எமது ஆதரவில் ஆட்சிக்கு வந்த சஜித் பிரேமதாச அவரது அலுவலகத்திற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றால் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் நிலைமைகள் என்னவாகும் என சிந்தித்துப்பாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.