வட்டவளை பேருந்து விபத்து l 12 பேர் காயம்.

ஹட்டன் – வட்டவளை பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

வட்டவளை பேருந்து விபத்து l 12 பேர் காயம்.

ஹட்டன் – வட்டவளை பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.