எரிபொருள் விலைகள் நள்ளிரவு உயர்ந்தன!
எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் விடுத்துள்ள அறிக்கையில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 306 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 358 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேபோல், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 226 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.