ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழப்பு!
ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.