தனியார் துறையின் குறைந்த சம்பளத்தை 25000 ரூபா வரை அதிகரிப்பதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்படும் - சஜித்!

எமது நாட்டின் பொருளாதார விருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்ற தனியார் துறை ஊழியர்களுக்கான பலமான வேலைத் திட்டங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார விருத்திக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தொழில் வழங்குனர்களின் முதலீட்டைப் போலவே ஊழியர்களும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பாரிய பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவர்கள் பணியிடத்தில் செய்கின்ற உன்னதமான பணிக்காக விஷேட திட்டங்கள் உண்டு. இதன் ஊடாக தனியார் துறையினரின் குறைந்தபட்ச சம்பளத்தை 25000 ரூபா வரை கொண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். அத்தோடு ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையிலான சேவை கொள்கையும் தயாரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு ஏற்பாடு செய்கின்ற மக்கள் வெற்றிப் பேரணி கூட்டத்துடரின் 39 ஆவது பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் காலியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

???? எமது வேலை திட்டங்களையே இன்று ஜனாதிபதி பிரதி (cooy) பண்ணுகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு தெளிவான கொள்கையும், தூரநோக்கு பார்வையும் உண்டு. ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட பல விடயங்களை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் SMS தகவல் ஊடாக அவற்றைச் செய்வதாக சொல்லுகின்றார்கள். அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்பாதையிலே சென்று கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

???? ஜனாதிபதியும் ஜேவிபியும் ஒன்றிணைவதற்கு இணக்கம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியும் ஒன்றாக இணைந்து பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புகின்றார்கள். பேஸ்புக் ஊடாகவும் இணையதளங்களுக்கும் பணம் செலுத்தி ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாக இணையப் போகின்றார்கள் என்று பொய்யான செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  ஐக்கிய மக்கள் சக்தி மக்களோடு மாத்திரமே இணைந்திருக்கும், மிகவும் மோசமான அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிற ஊழல் அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்வதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் மாளிமாவவின் ( தே.ம.ச) தலைவருக்கும் ஒன்றாக இணைவதற்கு விருப்பம் இருக்கலாம். அவர்களுக்கு ஒன்றாக இணைய முடியுமாக இருந்தாலும், நாட்டை சீரழித்த கும்பலோடு ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றாக இணையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

???? சிறந்த குழு எம்மிடமே இருக்கின்றது.

தற்பொழுது நாட்டைக்கட்டி எழுப்பக்கூடிய சிறந்த கொள்கை திட்டமும் தூரநோக்குப் பார்வையும், வேலைத்திட்டமும் ஐக்கிய மக்கள் சக்தியிடமும், ஐக்கிய மக்கள் கூட்டணியிடமுமே காணப்படுகின்றது. இயலுமையும், திறமையும், அனுபவமும், அறிவாற்றலும், சிந்தனைப் போக்கும், உள்ள சிறந்த குழு எம்மிடமே இருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தூரநோக்குப் பார்வை ஊடாக இந்த நாடு வீழ்ந்து இருக்கின்ற அதல பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றி, கல்வி துறையை பலப்படுத்துவோம். இந்தப் பொறுப்பை ஐக்கிய மக்கள் கூட்டணி நிறைவேற்றும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

???? வறுமைக்கு முற்றுப்புள்ளி.

எமது நாட்டில் பெரும்பான்மையானோர் ஏழைகளாக மாறி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், வறுமையை ஒழிப்பதற்காக 24 மாதங்களுக்கு தலா மாதாந்தம் 20,000 ரூபா வீதம் வழங்கி வறுமையில் இருந்து அவர்களை மீட்டெடுப்போம். ஆத்ம கௌரவத்தோடு வாழுகின்ற பரம்பரையை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.

வலையொளி இணைப்பு-