1700 ரூபாய் சம்பளம் பெற்று தருவது எனது பொறுப்பு - ஜீவன்!

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் பெற்று தருவது தனது பொறுப்பு என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
இரத்தினபுரி காஹவத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.