டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுப்பெற்றது!
அமெரிக்க டொலருக்கு எதிரான, இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான, இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கி, இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 285 ரூபாய் 85 சதமாக பதிவாகியுள்ளது.
டொலரின் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 85 சதமாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 87 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 300 ரூபா 92 சதமாகவும் பதிவாகி இருந்தது.