நாளையுடன் முடங்கும் சுகாதார சேவைகள் - 72 தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டம்!

நாளையுடன்  முடங்கும்   சுகாதார சேவைகள் - 72 தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டம்!

இலங்கையில் 

மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு நாளைய தினமும் தொடரவுள்ளது.

 தமக்கான உரிய தீர்வு முன்வைக்கப்படும் வரையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கங்களை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இன்று காலை 6 மணிமுதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி குறித்த சுகாதார தொழிற்சங்கங்கள்பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

இந்தநிலையில், நேற்றைய தினம் நிதியமைச்சின் அதிகாரிகளுடன், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத நிலையில், இன்றைய தினம் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.