அச்சுவேலி வைத்தியசாலையில் புதிய சிறுவர் மற்றும் கர்ப்பிணி சிகிச்சை நிலையம்!

அச்சுவேலி வைத்தியசாலையில் புதிய சிறுவர் மற்றும் கர்ப்பிணி சிகிச்சை நிலையம்!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பராமரிப்பு மற்றும் சிகிச்சை நிலையம் நேற்று (16) திறந்து வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக கர்ப்பிணிப் பெண்களுக்கான மற்றும் சிறுவர்களுக்கான சிகிச்சையை வழங்குவதில் சிரமத்தை எதிர்கொண்டு வந்த அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு பத்தமேனியைச் சேர்ந்த ஆறுமுகம் சிவானந்தனின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் முழுமையான நிதியுதவியில் 17 லட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த கட்டிடம் அமைக்கப்பட்டது.

வைத்தியசாலை நலன்புரி சங்க செயலாளர் ச.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் குறித்த கட்டிடத் தொகுதியினை ஆறுமுகம் சிவானந்தன் குடும்பத்தினர் மற்றும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

குறித்த கட்டட தொகுதியானது சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை வழங்குவதுடன் அவர்களை பராமரிப்பதற்கு ஏதுவாக இதர வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.