கைதான காவல்துறை பொறுப்பதிகாரி தற்காலிகமாக பணி இடை நீக்கம்!
கைதான உடப்பு காவல்துறை குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தற்காலிகமாக பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
புத்தளம் - உடப்பு பகுதியில், கிராம மக்கள் சிலர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடத்தப்பட்ட குறித்த தாக்குதலை அடுத்து அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு முந்தல் காவல்துறையினர் வரவரழைக்கப்பட்டனர்.
இதன்பின்னர், உடப்பு காவல்துறை குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நேற்று காலை கைது செய்யப்பட்டதுடன் அவரை பணி நீக்கம் செய்ய புத்தளம் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.