ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவிய சார்ஜன்ட் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவி புரிந்த காவற்துறை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையடக்க தொலைபேசி தரவு பகுப்பாய்வு பிரிவு ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர் கைதானார்.
வெளிநாட்டில் இருந்து செயற்பட்ட மிதிகம ருவன் என்ற ருவன் சாமரவுடன் ஹராக் கட்டா தப்பிச் செல்வதற்கான சூழ்ச்சியை காவல்துறை சார்ஜன்ட் வட்ஸ்அப் ஊடாக மேற்கொண்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மிதிகம பகுதியில் கைதான 36 வயதான காவல்துறை சார்ஜன்ட் திக்கும்புர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.