கிரானில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை காணவில்லை!
கோராவெளியில் உள்ள தங்களது சேனைக்கு நேற்று மாலை (25) சென்ற இரண்டு பேர் கோராவெளி புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கண்ணகி அம்மன் கோயில் வீதி கிரானைச் சேர்ந்த கா.குருபரன் (53) திகிலிவெட்டை சந்திவெளியைச் சேர்ந்த மா.விநாயகமூர்த்தி (71) என்ற முதியவருமே இவ்வாறு வெள்ளத்தில் காணாமல் போயிருந்தனர்.
இவர்களை தேடும் பணியில் பொதுமக்கள் பொலிஸார் மற்றும் பிரதேச இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, சடலம் இன்று காலை (26) கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
மரண விசாரணைகளின பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ள நீரானது இதுவரை வழிந்தோடவில்லை.
இதனால் குறித்த பிரதேசத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு காணப்படுவதனால் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நன்மை கருதி படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் வெள்ள அபாயம் தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அறித்தல்களும் வழங்கப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில் இவ் உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது.