கம்பஹா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவிய இருவர் கைது!

கம்பஹா – வெலிவேரிய பகுதியில் கடந்த மாதம் 5ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உதவிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்த துப்பாக்கியொன்றும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 5ஆம் திகதி வெலிவேரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கியை கொண்டு சென்றமை மற்றும் அந்த குற்றச் செயலுக்கு உதவியமை தொடர்பில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பாதுராகொட பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.