வனஜீவராசிகள் பாதுகாப்பின் முன்னோடிகளாக மக்கள் செயற்பட வேண்டும் - சஜித் பிரேமதாச!

வனஜீவராசிகள் பாதுகாப்பின் முன்னோடிகளாக மக்கள் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் வன விலங்கு - மனித மோதல் எதுவும் ஏற்படாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் எதிர்காலம் தொடர்பான தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டமொன்று இருக்க வேண்டும்.

வனப்பாதுகாப்பு பிரதேசம், வன தொழில்துறை பிற பிரதேசம் தொடர்பான இடம் சார்ந்த பௌதீக திட்டமிடல் இருக்க வேண்டும்.

தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டமொன்றும் இருக்க வேண்டும்.

இது உருவாகாத வரை அபிவிருத்தி சரியாக நடைபெறாது என்றும், பிரச்சினைகள் மேலும் உக்கிரமடையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாலுகால் விலங்கிற்கு வாக்கு இல்லை என்பதாலும்,

மக்களிடம் வாக்கு இருப்பதாலும் நாலுகால் விலங்கைப் பற்றி சிந்திக்காமல் செயல்படுகிறார்கள்.

யானை-மனித மோதல் இல்லாத பகுதிகளில் நாலுகால் விலங்கு பற்றி அதிகம் பேசப்படும் போது, அதிகம் பேசப்படுவது மக்களைப் பற்றியதால் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நடைமுறையில் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டம் சரியான முறையில் தயாரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வனவிலங்கு, சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் வனப் பாதுகாப்புத் திட்டம் வெற்றிகரமாக வேண்டுமானால் சமூகத்தை மையமாகக் கொண்ட திட்டமாக அது இருக்க வேண்டும் என்றும், வன மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் சமூகத்தை முன்னோடியாக மாற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வனவிலங்கு பாதுகாப்பு துறையில் 600க்கும் குறைவான வனவள பாதுகாப்பு அதிகாரிகளே உள்ளனர் என்றும், அவர்களுக்கு உதவ சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தாலும் அவர்களுக்கு சரியான பயிற்சி இல்லைஸ்ரீ

 இந்த கடுமையான ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பசுமை அபிவிருத்தியில் ஜனாதிபதி நேர்மையாக இருந்தால், வன விலங்குகளுக்கு உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், இவர்களுக்கு முறையான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும், இந்தப் பிரச்சினைகள் கடந்த ஆட்சி காலப் பிரிவுகளில் இருந்ததாலும் அதை இப்போது மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வியில் வனவிலங்கு பாதுகாப்பு கற்பிக்கப்பட வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் கல்வியை கட்டாய வழக்கமான பாடமாக்க வேண்டும் என்றும்,கல்வி அமைச்சு அவர்களுக்கு வருடாந்தம் வனவிலங்குகளைப் பார்வையிட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.