அரசியல்வாதிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

அரசியல்வாதிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடும் போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக வாக்குச் சீட்டின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் சீ.ஆர் பயிற்சி புத்தகத்தின் பக்கம் போன்று அச்சிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அரச அச்சகர் கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்ததால், 26 அங்குல நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டது.

நீளமான வாக்குச்சீட்டு

வாக்குச் சீட்டில் அச்சிடக்கூடிய அதிகபட்ச நீளம் 26 அங்குலம் என்றும் அதற்கு மேல் அச்சிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டு பெரிதாக்கப்படுவதால் வாக்குப்பெட்டியில் போடக்கூடிய தாள்களின் எண்ணிக்கையும் குறையும் என்று அரச அச்சகர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், விண்ணப்பப் படிவங்கள் போன்றவற்றை அச்சிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச அச்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.