திரையரங்குகளில் கைப்பேசிகளுக்கு தடை - விரைவில் புதிய சட்டம்!
திரையரங்குகளுக்குள் கைபேசிகளைக் கொண்டு செல்வது தொடர்பாக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என, திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைப்பேசிகளை எடுத்துச் செல்வதைத் தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.
அது தொடர்பில் திரைப்படக் கூட்டுத்தாபனம் தலையிட்டு தேவையான சட்ட ஏற்பாடுகளைத் தயாரிக்க வேண்டுமென திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாக இந்தத் தீர்மானத்தை மேற்கொள்வது பொருத்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.