கொழும்பில் இந்த ஆண்டில் 260க்கும் மேற்பட்ட தீ விபத்துகள்!
2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு நகர எல்லையில் மாத்திரம் 268 அனர்த்தங்கள் தீயினால் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்துகளில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் அடங்களாக 37 உயிர்கள் இதில் இழக்கப்பட்டுள்ளன. 54 அவசரநிலைகள் ஏற்பட்டதுடன், 65 முறை அம்புலன்ஸ் சேவைகள் பயன்படுத்தும் தேவை எழுந்திருந்ததாகவும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது.
மிக அண்மைய சம்பவமாக கொழும்பு கங்காராம விகாரைக்கு அருகில் பெரஹெர மாவத்தையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் தீ பரவியது.
உணவகத்தில் உள்ள எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.