ஜனாதிபதி ரணில் அவுஸ்திரேலியாவில் பிரமுகர்களுடன் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் அவுஸ்திரேலியாவில் பிரமுகர்களுடன் சந்திப்பு!

மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரதமர் ரொஜர் குக்கிற்கும் (Roger Cook) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங்கிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில்,இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.