மணல் அகழ்வை  நிறுத்துமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்!

மணல் அகழ்வை  நிறுத்துமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் மணல் அகழ்வை  நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இன்று முற்பகல் 9 மணிக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலை முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.