நீதிமன்ற அவமதிப்பு - சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுக்கள் மீள விசாரணைக்கு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு வழக்கில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களை, மீள விசாரணைக்கு அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.

குறித்த மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான, நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

இதன்போது, அந்த மனுக்களை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி மீள விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளுக்கு அமைவான, குரல் பதிவுகளை ஆராய வேண்டி உள்ளமையால், அவற்றை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்க வேண்டும் என சட்டமா அதிபர் மன்றில் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான, பிரதி மன்றாடியார் நாயகம், இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த இலங்கை சட்டவைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, அவ்வாறான விசாரணையின்றி, இந்த மனுக்களை முன்கொண்டு செல்ல தமக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார்.