எல்லை தாண்டி மீன் பிடித்த நாகை மீனவர்கள் 15 பேர் படகுடன் கைது

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக மீனவ சமூகத்தினரிடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் மீட்டு தர வேண்டும் என நாகை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.