கொழும்பு முதல் பதுளை வரையிலான ரயில் சேவைகள் தாமதம்!
கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் - ஸ்டேசன் வட்டகொட பகுதியில் தடம்புரண்டுள்ளமையே தாமதத்திற்கு காரணமாகும்.

கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் - ஸ்டேசன் வட்டகொட பகுதியில் தடம்புரண்டுள்ளமையே தாமதத்திற்கு காரணமாகும்.
குறித்த ரயில் இன்று காலை 8.15 அளவில் தடம்புரண்டதாக தலவாக்கலை ரயில் நிலையத்தின் கடமைநேர அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
தடம் புரண்டுள்ள ரயிலினை தடமேற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் ரயில், ஹட்டன் ரயில் நிலையத்திலும், பதுளையிலிருந்து கொழும்பிற்கு செல்லும் ரயில் நானுஓயா தொடருந்து நிலையத்திலும் தற்காலிகமாக நிறுத்திவைக்கபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு முதல் பதுளை வரை நாளாந்தம் 08 ரயில் சேவைகள் இடம்பெறுவதாகவும் கடமைநேர அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.