கராபிட்டிய போதனா மருத்துவமனையில் 100 மருத்துவர்களுக்கு வெற்றிடம்!

நாட்டின் பிரதான அரச மருத்துவமனையான காலி கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சுமார் 100 மருத்துவர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகளை முன்னெடுப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு 556 மருத்துவர்கள் தேவைப்படுகின்ற போதிலும் தற்போது 460 மருத்துவர்களே உள்ளனர்.

மருத்துவர்களின் வெற்றிடம் காரணமாக மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை பிரிவு மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் காலி கராபிட்டிய போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் யு.எம்.ரங்க கருத்து தெரிவிக்கையில், “தற்போது சுமார் 100 மருத்துவர்களுக்கான வெற்றிடம் இருப்பதாக தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு போதியளவு மருத்துவர்களை வழங்காமையே இந்த நிலைக்கு காரணம்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.