அனுமதியின்றி வெளியாட்களை அழைத்து வர முடியாது - சபாநாயகர்
நாடாளுமன்ற குழுக் கூட்டங்களுக்கு வெளியாட்கள் யாரையேனும் அழைத்து வருவதாயின், தம்மிடமிருந்து கட்டாயமாக எழுத்துமூல அனுமதியை பெற வேண்டுமென அனைத்து நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்களுக்கு சபாநாயகர் அறியப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.
அண்மையில், கோப் எனப்படும் அரசாங்கத்தின் பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழுவுக்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அதன்போது, கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார, அவரது மகனான கனிஷ்க பண்டாரவை அழைத்து வந்தமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.