வேலுபிள்ளை பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க சிறிலங்கா அரசாங்கம் தயங்குகின்றது? வலுக்கும் சந்தேகங்கள்!
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்தது என்றும் அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் கூறிய அரசாங்கம் இது வரை பிரபாகரனின் மரண சான்றிதழை பகிரங்கப்படுத்தவில்லை.

இந்த நிலையில், பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன இலங்கை இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
எனினும் அந்த அறிக்கையை வழங்குவதானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஒருவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிடுவதால் அது எப்படி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளமை மட்டுமல்லாது பிரபாகரனின் மரணத்திலும் இது பல சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.