கம்பஹா -  ரத்தொழுகம சம்பவம் - சிறுமி மற்றும் மாமியின் சடலங்கள் மீட்பு!

கொலை செய்யப்பட்ட 4 வயதுடைய முன்பள்ளி சிறுமியின் சடலமும் அவரின் தந்தையின் இளைய சகோதரரின் சடலமும் கம்பஹா -  ரத்தொழுகம சாம வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளன.

45 வயதுடைய குறித்த நபர் சிறுமியை கொலை செய்ததன் பின்னர் சுருக்கிட்டு தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது

நேற்றைய தினம் குறித்த சிறுமி முன்பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றது. 

குறித்த சிறுமியின் தாய் ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிவதுடன் அவரின் தந்தை கூலித்தொழிலாளியாக பணிப்புரிகின்றார். 

சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.