Lanka IOC, Sinopac எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!

Lanka IOC மற்றும் Sinopac எரிபொருள் நிறுவனங்களும் இன்று காலை முதல் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்துக்கு ஏற்ப தமது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன.

Lanka IOC, Sinopac  எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!

இதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 லீற்றரொன்றின் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 366 ரூபாயாகக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெற்றோல் ஒக்டேன் 95 லீற்றரொன்றின் விலை 38 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாயாகும்.

ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 358 ரூபாய்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாய்.

அதேநேரம் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 11 ரூபாயினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 236 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.