எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் நுழைய விட மாட்டோம் - இந்தியாவிடம் உறுதியளித்த இலங்கை!

எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும், தமது துறைமுகங்களில் நங்கூரமிடவோ அல்லது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் செயற்படவோ, ஒரு வருட காலத்திற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று இலங்கை, இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது.

எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் நுழைய விட மாட்டோம் - இந்தியாவிடம் உறுதியளித்த இலங்கை!

தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மூலோபாய மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கு மதிப்பளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang hong 3 தென் இந்தியப் பெருங்கடலில் ஆழமான நீரியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த தடை குறித்து கடந்த வாரம் உயர்மட்ட இராஜதந்திர தரப்புக்கள் மூலம் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, 2024 ஜனவரி 5, முதல் 2024 முதல் மே இறுதி வரை தென் இந்தியப் பெருங்கடலில் "ஆழ்ந்த நீரியல் ஆய்வு" நடத்த திட்டமிடப்பட்ட சீன அறிவியல் ஆய்வுக் கப்பலான Xiang Yang hong 3 க்கு இலங்கை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்படாது. 

இதேவேளை இந்த கப்பல் ஆய்வுக்கு அனுமதிக்குமாறு மாலைத்தீவிடமும் சீனா கோரிக்கையை முன்வைத்திருந்தது

எனினும் இது தொடர்பில் மாலைத்தீவின் பதில் இதுவரை வெளியிடப்படவில்லை.