நுளம்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்தும் திருத்தப்படவில்லை?
2007 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க நுளம்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்த பின்னரும் திருத்தப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

2007 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க நுளம்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்த பின்னரும் திருத்தப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சம்பந்தப்பட்ட சட்டத்தின் நோக்கங்களுக்காக தகுதிவாய்ந்த அதிகாரியாக இருக்க வேண்டும்.
அத்துடன், அவர் விரும்பினால், சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது குறிப்பிட்ட பகுதியின் பொது சுகாதார பரிசோதகருக்கு அதிகாரங்களை வழங்கலாம்.
எனினும் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகத்தர் நியமிக்கப்படாமையால் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் டபிள்யூ.ரி.ரொஷான் குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலவும் பருவ மழை காரணமாக டெங்கு பரவுவதில் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் தீவிரமடையலாம் என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள உயரமான கட்டடங்கள் பாதுகாப்பு கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்தார்.