பெண்களுடன் சல்லாபித்த பௌத்த பிக்கு விவகாரம்: 8 பேர் கைது - ஜூ.12 வரை விளக்கமறியல்!!
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நவகமுவ பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் நவகமுவ காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த பிக்குவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் பெண்ணும் அவரது மகளும் வீட்டினுள் தங்கியிருந்த போது, வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த இளைஞர்கள் குழுவொன்று, அவர்களை தாக்கியதாக காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களை இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Update
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று(8) கடுவலை நீதிவான் முன், பிரசன்னப்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நவகமுவ பகுதியை சேர்ந்த பிக்குவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் இரண்டு பெண்கள், ஒன்றாக இருந்த வேளையில், அவர்களை இளைஞர்கள் குழுவொன்று தாக்குவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.