தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப்பிரகடனம் குறித்து ரணில் விமர்சனம்!
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரடகனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விமர்சனம் செய்துள்ளார்.
மாவனல்ல பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் நாட்டின் வருமானம் 200 பில்லியன்களினால் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரசாங்கம் இழக்கும் வருமானத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், அரசாங்க வருமானத்தை குறைத்து எவ்வாறு செலவுகளை மேற்கொள்வது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கணிதம் இந்த பொருளாதாரம் தெரியாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினர் நாட்டின் பொருளாதாரம் கடந்து வரும் தொங்கு பாலத்தின் இரண்டு முனைகளையும் வெட்டி விடவே முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாம் தொங்கு பாலத்தை கைவிடாமல் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தை தாம் முழுமையாக வாசித்ததாகவும், அதனை நாட்டு மக்கள் தேர்தலுக்கு முன்னர் வாசிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.