சிகரெட்டின் விலை மற்றும் மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

மதுபான உற்பத்தி நிறுவனங்களும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது உற்பத்திகளின் விலையை அதிகரித்துள்ளன.

சிகரெட்டின் விலை மற்றும்   மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாயினாலும், 375 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின விலை 50 ரூபாயினாலும், 180 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வற் வரி திருத்தத்திற்கு அமைய சிகரெட்டின் விலை இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிகரெட்டின் விலை 3 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 5 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபா மற்றும் 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.