Litro சமையல் எரிவாயுக்களின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், அதிகரிக்கப்படுகின்றது.

Litro சமையல் எரிவாயுக்களின் விலை அதிகரிப்பு!

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,250 ரூபாயாகும். 

அத்துடன், 05 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 276 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன் புதிய விலை 1,707 ரூபாயாகும். 

மேலும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 127 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 795 ரூபாயாக பதிவாகியுள்ளது.