ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!
ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காசா மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்கல், இஸ்ரேலில் சிறைச்சாலையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிப்பது தொடர்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில், ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, பணய கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் தரப்பின் தலைவர்களில் ஒருவரான தாஹிர் அல்- நோநோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், வடக்கு இஸ்ரேல் பகுதிக்கு தேவையான உதவிகளை இஸ்ரேல் விநியோகிக்காமல் உள்ளது எனவும், சிறையில் நீண்ட கால தண்டனையில் உள்ள பணய கைதிகளை விடுவிக்க மறுப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.