படகு கவிழ்ந்ததில் 12 பாகிஸ்தான் மீனவர்கள் பலி!

அரேபிய கடலில் படகு கவிழ்ந்ததில் 12 பாகிஸ்தானிய மீனவர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தானிய இராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானின் தெற்கு மாகாணத்தின் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள படகு கவிழ்ந்தில் 14 மீனவர்களும் காணாமல் போயிருந்தனர்.
இந்தநிலையில் தொடர்ச்சியாக மீட்பு பணிகளில் ஈடுபட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் 12 மீனவர்கள் சடலங்களை மீட்டுள்ளனர்.
இராணுவ மக்கள் தொடர்பு பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் காணாமல் போயுள்ள மேலும் 2 மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது,