இந்து கோயில் மீது மர்ம நபர்கள் ரொக்கெட் குண்டு வீச்சு!
பாகிஸ்தான் - சிந்து மாகாணத்தின் காஷ்மோர் நகரில் உள்ள ஒரு கோயில் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் - சிந்து மாகாணத்தின் காஷ்மோர் நகரில் உள்ள ஒரு கோயில் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவத்தை தொடர்ந்து கோயிலை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பொலிஸார் வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.