கண்டி யுவதியின் மரண விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு
பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் குறித்த யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய குழுவொன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் நியமிக்கப்பட்டது.
கண்டி, பொத்துபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி ஜயரத்ன என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தார்.
வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 11 ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரண்டு ஊசி மருந்தூட்டல்கள் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியம் மற்றும் தரமற்ற மருந்துகளை பயன்படுத்தியதால் மரணம் ஏற்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.