விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை - பிரேத பரிசோதனை நிறைவு!
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகளான மீரா மின்விசிறியில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை 03 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சர்ச் பார்க் பள்ளியில் ,12ஆம் வகுப்பில் கல்வி பயின்று வந்த மீரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், மீராவின் உடல் சென்னை - ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீராவின் உடலம் இன்று மாலை அல்லது நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.