அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் கைது: சதி முறியடிப்பு!

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் கைது: சதி முறியடிப்பு!

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த நான்கு பேரும் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், பாகிஸ்தானில் இருந்து கட்டளைக்காக காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையை சேர்ந்த 4 பேரும் சென்னை வழியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு நேற்றிரவு 8.10 மணியளவில் வந்த நிலையில், குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் வெளியிட்ட அறிக்கையில்,

“ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த 4 பேர், அகமதாபாத்துக்கு மே 18 அல்லது 19-ஆம்  திகதி ரயில் அல்லது விமானம் மூலம் வரவுள்ளதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், ஒரே எண்ணில் 4 பேர் இலங்கையில் இருந்து அகமதாபாத்துக்கு விமானத்தில் வரவிருந்தது உறுதி செய்யப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

நேற்று காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் மூலம் சென்னை வழியாக அகமதாபாத் வந்த 4 பேரும் இரவு 8.10 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முகமது நுஸ்ரத், முகமது நஃப்ரான், முகமது ஃபரீஸ், முகமது ரஷ்தீன் என்பது அவர்களின் பெயர் எனத் தெரிய வந்துள்ளது.