ஈரான் ஜனாதிபதிக்காக இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைச்சிக்காக நாடளாவிய ரீதியில் இன்று துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மே 21ஆம் திகதியை துக்க நாளாக இலங்கை பிரகடனப்படுத்தியுள்ளது.
அதேபோல் அரச நிறுவகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.