சஜித் அணியின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்புகை - நீர்த்தாரை பிரயோகம் - முஜிபுர் ரஹ்மான் படுகாயம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு - நகர மண்டப பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணியினால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
“மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் - 2024'' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.