நாடு திரும்பினார் ஜனாதிபதி
![நாடு திரும்பினார் ஜனாதிபதி](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67ad79a3cd8ad.jpg)
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற உலக அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், நேற்று மாலை உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்தார்.
உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன் இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது