ஆழிப்பேரலை ஏற்படும் அபாய நிலை கடந்துள்ளது!
தெற்கு பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளுக்கு ஆழிப்பேரலை அபாய எச்சரிக்கை அபாய நிலையை கடந்துள்ளது.
பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜப்பானின் சில பகுதிகளில் 3 மீற்றர் உயரத்தில் ஆழிப்பேரலைகள் நிலத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், தற்போது ஆழிப்பேரலை அபாயம் மறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.