உலகிலேயே இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு!

உலகிலேயே இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு!

உலகின் இரண்டாவது பாரிய வைரம் தென்னாபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் (Botswana) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்த லுகாரா டயமண்ட் கர்ப்(  Lucara Diamond Corp) நிறுவனத்தினால் போட்ஸ்வானா தலைநகர் கபரோனில் இருந்து 500 கி.மீ தொலைவிலுள்ள கெய்ரோ (Cairo) சுரங்கத்திலே 2492 கரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1905 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3106 கரட் கல்லினன் (Cullinan) வைரத்திற்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பாரிய வைரம் இதுவாகும்.

இதற்கு முன்னர்  2019 ஆம் ஆண்டில், இதே சுரங்கத்தில் 1758 கரட் செவாலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வைரத்தை பிரான்ஸ் பேஷன் நிறுவனமான Louis Vuitton வாங்கியது. ஆனால், அதன் விலையை வெளியிடவில்லை.

முன்னதாக 2017ஆம் ஆண்டில், போட்ஸ்வானாவின் கெய்ரோ சுரங்கத்தில் 1,111 கரட் லெசிடி லா ரோனா வைரம் கண்டுபிடிக்கப்பட்டது, இதை ஒரு பிரித்தானிய நகைக்கடைக்காரர் ரூ.444 கோடிக்கு வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், போட்ஸ்வானா உலகின் மிகப்பாரிய வைர உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளதோடு, உலகின் வைரத்தில் 20% இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.